மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்த் குறித்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்.. கடுப்பான ஐஸ்வர்யா ராஜேஷ்.??
![Aiswarya rajesh angry about press peoples Controversial questions](https://cdn.tamilspark.com/large/large_img20240105114545-69923.jpg)
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.
முதன்முதலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது வெப் சிரிஸ்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாறு சினிமாவில் பிசியான நடிகையாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமூக வலைதளங்களிலும் தொடந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ சூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்தது வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. இதுபோன்ற நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.
இதன் பின்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் தொடர்ந்து விஜயகாந்த் குறித்தும், நடிகர் சங்க கட்டடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டதால் கடை திறப்பு விழாவிற்கு வந்துள்ளேன் அதை பற்றி மட்டும் கேளுங்கள் என்று கடுப்புடன் பதிலளித்தார்.