திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புது கார் வாங்கிய VIP 2 நடிகை கஜோல்! காரின் விலையை கேட்டால் தலையே சுற்றும்! எவ்வளவு தெரியுமா?
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் அதிக விலை கொடுத்து கார் வாங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பிரபல பாலிவுட் தம்பதியான கஜோல் அவரது கணவர் அஜய் தேவ்கன் இருவரும் வாங்கியுள்ள புது கார் ஓன்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Rolls-Royce Cullinan என்ற ஆடம்பர காரைத்தான் இந்த தம்பதியினர் வாங்கியுள்ளனர். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்றால், இந்த காரின் விலைதான் அந்த ஆச்சரித்திற்கு காரணம். ஆம், இந்த மாடல் காரின் விலை சுமார் 6.96 கோடி ஆகும். இவ்வளவு விலை கொடுத்து இதுவரை எந்த ஒரு சினிமா பிரபலமும் கார் வாங்கியது இல்லை.
இந்தியாவை பொறுத்தவரை பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் டி சீரிஸ் பூஷன் குமார் ஆகியோர் மட்டுமே இந்த காரை இதுவரை வாங்கியுள்ளனர். இந்தியாவில் இந்த காரை வாங்கும் மூன்றுவது நபர் அஜய் தேவ்கான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.