மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லியில் அஜித் படைத்த அசத்தலான சாதனை.! வைரலாகும் மாஸ் புகைப்படத்தால் கொண்டாடும் ரசிகர்கள்!!
kதமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவருக்கு பல பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் நடிக்கவும் பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
அதுமட்டுமின்றி இவரது ஒவ்வொரு படங்கள் வெளியாகும் நாட்களையும், அவரது பிறந்தநாளையும் ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். அஜித் சினிமா துறையில் மட்டுமின்றி கார் பைக் ரேஸ், அறிவியல், விளையாட்டு என மிகவும் வித்தியாசமாக தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் தற்போது துப்பாக்கி சுடுதல் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதற்காக பல போட்டிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில் அஜித் தற்போது டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வருகிறார்.அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
மேலும் அந்த துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் 200 மதிப்பெண்களை பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளார். அத்தகைய ஆதார புகைப்படமும் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.