#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சென்னை ஏர்போர்ட்டில் தல அஜித்துடன் த்ரிஷா!" வீடியோ வைரல்!
1993ம் ஆண்டு "அமராவதி" படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் அஜித்குமார். தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் ஆசை, வான்மதி, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், அமர்க்களம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும், அப்படத்திற்கு "விடாமுயற்சி" என்று பெயரிடப் பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து வேறு தகவல்கள் வெளியாகாத நிலையில், படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் படம் கைவிடப்படவில்லை என்றும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியதையடுத்து, அசர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அங்கு நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்ட அஜித், சிலநாட்கள் ஓய்வுக்காக சென்னை திரும்பினார்.
அது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், தற்போது ஒரு வீடியோவில் அஜித்துடன் த்ரிஷாவும் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து இப்படத்தில் த்ரிஷா தான் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.