மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவர் எப்படி அதை சொல்லலாம்.! அந்த பொண்ணை தூக்கிடுங்க.! ஹீரோயின் மீது ஆவேசமான நடிகர் அஜித்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும். அஜித் இறுதியாக வலிமை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக அஜித் உடல் எடையைக் குறைத்து தனது லுக்கை மாற்றியுள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் அட்டகாசம் படப்பிடிப்பு தளத்தில் கோபப்பட்டது குறித்த தகவலை பத்திரிகையாளர் ஒருவர் அண்மையில் கூறியுள்ளார். அட்டகாசம் படத்தில் தல தீபாவளி பாடலிற்கு சீனா தானா புகழ் நடிகை ரகசியா டான்ஸ் ஆடியுள்ளார். அப்பொழுது பாடலின் சில வரிகள் மட்டும் நடனமாடிய அவர் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே பேக் அப் பண்ணிடலாமா? என கேட்டாராம்.
உடனே அஜித் கோபப்பட்டு எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள். என் படத்திற்கு இவர் எப்படி பேக் அப் சொல்லலாம் என கூறியுள்ளாராம். மேலும் இந்த பெண் இனி இந்த பாடலில் நடனம் ஆடவேண்டாம் என இயக்குனரிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.