மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கால் பந்தில் கலக்கும் ஆத்விக் அஜித்!" குடும்பத்துடன் மைதானத்தில் அஜித் - ஷாலினி!
லைக்கா ப்ராடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துவரும் திரைப்படம் "விடாமுயற்சி". இதில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் நீண்டகாலமாக படப்பிடிப்பு தொடங்காமல், எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் அசர்பைஜான் நாட்டில் ஆரம்பமானது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அஜித் சென்னை திரும்பினார்.
படப்பிடிப்பை முடித்து விட்டு சிறிய ஓய்வுக்காக அஜித் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை திரும்பிய அஜித், தனது மனைவி ஷாலினியுடன், தங்களது மகன் ஆத்விக்கின் கால்பந்து கிளப் மைதானத்தில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர்.
இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆத்விக் சிறு வயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் ஆத்விக் கால் பந்து விளையாட்டில் கோல்ட் மெடல் வென்ற புகைப்படங்கள் கூட வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.