மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் தல ரசிகர்கள் செய்த அசத்தலான காரியம்.! பாராட்டித்தள்ளும் விஜய் ரசிகர்கள்.!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள ‘வலிமை’ திரைப்படத்தில் தல அஜித் ஆக்சன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தல அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படம் அடுத்த 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாய் அமைந்தது. இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அஜித்தின் ரசிகர்கள் பத்தாயிரம் பனமர விதைகளை நடவு செய்துள்ளனர்.
இதுவரை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பனமர விதைகளை விதைத்த ’பனைமர காதலர்கள்’ என்ற அமைப்புடன் கைகோத்து அஜித் ரசிகர்கள் இந்த சாதனையை செய்துள்ளனர். அழிந்து வருவதாகக் கூறப்படும் பனை மரங்களைக் காக்க அஜித் ரசிகர்களின் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை விஜய் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்