மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா..என்னவொரு பணிவு! தல வேற லெவல்தான்! வீடியோவை கண்டு வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்கள் தல அஜித் படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். மேலும் அப்படத்தின் அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். அவர்கள் படக்குழுவிடம் துவங்கி பிரதமர் வரை வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்குகிறார்.
Exclusive Video Of Thala #Ajith at Rifle Club. #Valimai #AjithKumar pic.twitter.com/SSSxLdUsx8
— Ajith Network (@TeamAKnetwork) March 3, 2021
தல அஜித் சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அஜித் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவரது பயிற்சியாளர் ஏதோ சொல்ல, உடனே அஜித் எழுந்து நின்று, தனது தொப்பியை கழற்றி மரியாதையுடன் தலையை அசைத்து பதில் சொல்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருந்தாலும் தலைக்கனம் இல்லாதவர் தல என புகழ்ந்து வருகின்றனர். மேலும் அவரிடம்தான் மரியாதையை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.