மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் ரீ-ரிலீஸாகும் 'பில்லா' திரைப்படம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
நடிகர் அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி, கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.
இந்த திரைப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, பில்லா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரஜினி நடித்த பில்லா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.