மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் இந்த படத்தின் காப்பியா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த படத்தின் ஒரு விறுவிறுப்பான சண்டைக்காட்சி ஒன்றை ஹாலிவுட் கலைஞர்கள் உதவியோடு படமாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் என்று தகவல் ஒன்று பரவி வருகிறது.
அதன்படி, இளம் காதலர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்த ஒரு ஹாலிவுட் படத்தின் கதையை தான் சில மாற்றங்களை செய்து இயக்குனர் மகிழ்திருமேனி விடாமுயற்சி கதையாக மாற்றி அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.