திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரேடியாக சம்பளத்தை உயர்த்திய அஜித்குமார்.. அடங்கேப்பா இத்தனை கோடியா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அஜித்குமாரின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் ஆதித் ரவிச்சந்திரன் இயக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் அஜித் குமாருக்கு ரூ.165 சம்பளம் வாங்க போவதாக அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.