திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தல அஜித்தின் அட்டகாசமான கிளிக்; வைரல் போட்டோ இதோ.!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லீ (Good Bad Ugly). தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், நடிகர் அஜித் குமார் உட்பட பலர் நடிப்பில் உருவாகும் இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
மேலும், நடிகர் அஜித் - இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாட்டில் தீவிரமாக நடைபெற்று முடிந்தது.
Exclusive recent pic of Ajith sir ❤️🙏👍#Ajithkumar #GoodBadUgly #VidaaMuyarchi pic.twitter.com/yyc4q1IshH
— TRENDS AJITH (@TrendsAjith) April 1, 2024
படம் வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் சாலை பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது புதிதாக எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.