மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அஜித்துக்கு இப்படியொரு ஆசையா ? ஷாக் ஆன ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
மேலும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அஜித்தின் பரம ரசிகர்களாக உள்ளனர். மேலும் இவரோடு இணைந்து நடிப்பதை மாபெரும் கனவாகவும் வைத்துள்ளனர்.
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் தற்போது போனி கபூர் தயாரிப்பில் பிங்க் தமிழ் ரீமேக்கான தல 59 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டூடியோவான ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெறுகிறது.
ஒரே நேரத்தில் பல்வேறு படப்பிடிப்புகள் நடக்கும் அந்த ஸ்டூடியோவுக்குள் மலையாள நடிகர் மோகன்லால் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதை அறிந்த அஜித் நேரில் சென்று அவரை சந்தித்து பேசியுள்ளார்.
அதனைப்போலவே அங்கு நடைபெற்ற பிரபாஸ் பட ஷூட்டிங்கிற்கும் சென்று அவரையும் சந்தித்துள்ளார்.மேலும் அவர்களுடன் பல மணிநேரம் பேசியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் அஜித் மோகன்லால் மற்றும் பிரபாஸ் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.