மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கமான மனசு.. பைக்கில் பின்தொடர்ந்த ரசிகர்கள்.! பதறிப்போய் நடிகர் அஜித் செய்த காரியம்! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். எதார்த்தமான குணம் கொண்ட இவர் நடிப்பு மட்டுமின்றி பைக் கார் ரேஸ், ட்ரோன் செலுத்துவது, துப்பாக்கி சுடுதல் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருகிறார். அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச், வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது. இந்த நிலையில் அஜித் சென்னையில் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரை காண ரசிகர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடியுள்ளனர். மேலும் சில ரசிகர்கள் அங்கு சுவர்களில் ஏறி அஜித்தை காண ஆரவாரம் செய்துள்ளனர். பின்னர் அவரது காரை தொடர்ந்து சென்றுள்ளனர்.
இவற்றையெல்லாம் கண்ட நடிகர் அஜித் அவர்களை தன்னை காண வரவழைத்துள்ளார். பின் அவர்களிடம், சுவர்களின் மீதெல்லாம் ஏறுகிறீர்கள். கார் பின்னாடியே பைக்கில் பின் தொடர்ந்து வருகிறீர்கள். அப்படியெல்லாம் செய்ய வேண்டாம். ஏதாவது தவறு நடந்து விட்டால் அனைவருக்கும் கஷ்டமாகிவிடும். நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என அவர்களது தோள் மீது கை போட்டு அன்பாக கூறியுள்ளாராம். இதுகுறித்து அறிந்த அஜித் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.