#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நான் கடவுள் படத்தில் அஜித் நடித்தரா.? வைரலாகும் அஜித்தின் அட்டகாசமான போட்டோஸ்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் அஜித். இவர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த அஜித்தை அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் என்றும் தல என்றும் பெயர் பெற்றுள்ளார்.
ஆரம்பகால கட்டத்தில் அஜித் சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் தற்போது தனது விடாமுயற்சியின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களை அளித்து வருகிறார். இது போன்ற நிலையில் அஜித், இயக்குனர் பாலாவுடன் இணைந்து நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த செய்திகள் வெளியாகின
இதன் பின்பு அஜித் மற்றும் பாலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் போட்டோஷூட் நடைபெற்றது பாதியில் நின்று விட்டது இச்செய்தி இணையத்தில் வைரலாகி வந்தது. இதனை அடுத்து தற்போது அஜித், பாலா காம்பினேஷனில் உருவாகவிருந்த நான் கடவுள் படத்தின் போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் இப்படத்திற்கு பின்பு பாலா இயக்கத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்து வெளியான நான் கடவுள் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. மேலும் ரசிகர்கள் ஆரியாவின் நடிப்பை பாராட்டி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.