குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அதிகாலையில் சாமி தரிசனம் செய்த நடிகர் அஜித்! அதுவும் எங்கு தெரியுமா? தீயாய் பரவும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். அவரது நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து அஜித் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அஜித் போனிகபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில் AK61வது படத்தில் நடிக்கவுள்ளார். பஅதனை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கிடையில் அஜித் மற்றும் அவரது குடும்பங்கள் குறித்த எந்த தகவல்கள், புகைப்படங்கள் வெளிவந்தாலும் அதனை ரசிகர்கள் இணையத்தில் பெருமளவில் வைரலாக்குவர்.
இந்த நிலையில் நடிகர் அஜித் தற்போது கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் அதிகாலையில் தரிசனம் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.