மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாலினி கையை கத்தியால் அறுத்த அஜித்.! காரணம் தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு.?
கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஆவார். சமீபத்தில் இவர் நடித்த 'துணிவு' திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. தற்போது அஜித்தின் 63 வது படத்தின் பெயர் 'விடாமுயற்சி' என்று அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
இது போன்ற நிலையில், அஜித் ஷாலினி காதலித்து திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டாம் என்பது ஷாலினி எடுத்த முடிவு. இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் போது நடந்த சுவாரசியமான சம்பவங்கள் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது.
அஜித் பட இயக்குனர் சரண், யூடியூபில் அஜித் ஷாலினி காதலை குறித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது அஜித் ஷாலினிக்கு பூங்கொத்து கொடுத்து முதல் நாள் வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார்.
மூன்றாவது நாள் படப்பிடிப்பின் போது அஜித் ஷாலினியை கத்தியை கொண்டு கையை கிழிக்கும் காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கிழித்து ரத்தம் கொட்டியது. அஜித் அந்த நேரத்தில் ஷாலினிக்கு ஆயிரம் சாரி சொல்லி இருப்பார். ஷாலினி தந்தையிடமும் சென்று மன்னிப்பு கேட்டு தெரியாமல் ஆகிடுச்சு என்று கூறினார். ஷாலினியின் தந்தை இப்படமும் ஹிட்டாகிவிடும் என்று கூலாக பதில் அளித்திருக்கிறார். இவ்வாறாக இயக்குநர் அப்பேட்டியில் அஜித் ஷாலினியின் காதல் கதையை கூறிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது