மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. நடிகர் அஜித்- ஷாலினியின் கல்யாண அழைப்பிதழை பார்த்துருக்கீங்களா! தீயாய் பரவும் புகைப்படம் இதோ!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது.
நடிகர் அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தபோது நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளார். சினிமாதுறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் ஹீரோயினாகி சில படங்களில் நடித்துள்ள ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வருகிறார்.
#AK Marriage Invitation ❤️ #Valimai #AK61 @TCAFMDU pic.twitter.com/oV7fkZ93w1
— Temple City AJITH Fans-Madurai (@TCAFMDU) April 26, 2022
இந்நிலையில் தற்போதும் அழகிய காதல் ஜோடிகளாக விளங்கிவரும் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண அழைப்பிதழ் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாக்கி வருகின்றனர்.