மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அஜித்- ஷாலினியா இது! என்னா ரொமான்ஸ்! மச்சினிச்சி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். அவரது நடிப்பில் இறுதியாக உருவான திரைப்படம் வலிமை. இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
நடிகர் அஜித் குமாரின் மனைவி நடிகை ஷாலினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர். மேலும் அவர் விஜய், பிரசாந்த் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாகவும் நடித்து பிரபலமானார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அவர் பிரபலங்களுடன் இணைந்து சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். ஷாலினி அஜித்துடன் இணைந்து அமர்க்களம் படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தற்போது அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்த ஏதேனும் தகவல்கள் மற்றும் புகைப்படம் வெளிவந்தால் அதனை ரசிகர்கள் பெருமளவில் வைரலாக்குவர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக ஷாலினியின் தங்கை ஷாம்லி அஜித் மற்றும் ஷாலினி இருவரும் மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.