திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தல அஜித் விரும்பி நடிக்க கூப்பிட்டும் நடிக்க மறுத்த நடிகை! பின்னர் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!
தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவர் சினிமாவில் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.
மேலும் இவருடன் இணைந்து நடிப்பது பல நடிகர், நடிகைகளின் கனவாக இருந்து வருகிறது. ஆனால் அஜித் விரும்பி கேட்டும் நடிக்க முடியாமல் போனது குறித்து குணசித்திர நடிகை சுதா மனம் திறந்து பேசியுள்ளார்.
அதில் சிட்டிசன் படத்திலேயே தல அஜித்துடன் இணைந்து நடிக்க தன்னை அழைத்ததாகவும், அதுவும் தல அஜித் அவர்களே விரும்பி நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அப்போது நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பின் அஜித்தின் வேதாளம் படத்தில் நடிகர் தம்பிராமையாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அவர் அந்த படத்திற்கு நடிக்க வந்த போது அஜித் தன்னை பார்த்ததும் ஓடி வந்து அம்மா உங்களுடன் நடிப்பது சந்தோசமாக உள்ளது என்று கூறினாராம்.
மேலும் ஒரு சிலரை பார்த்தால் தானாக மரியாதை வரும் அதே போல் தான் அஜித்தை பார்க்கும் போதும் எனக்கு மரியாதை வருகிறது என நெகிழ்ச்சியாக சுதா கூறியுள்ளார்.