மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தல அஜித்துனா சும்மாவா! கதையே சொல்ல வேண்டாம்! உங்கள் படம் என்றால் வில்லனாக கூட நடிப்பேன்! பிரபல இயக்குனரிடம் கூறிய அஜித்.
தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு மிக சிறந்த முன்னணி நடிகர். இவரின் எளிமை, நல்ல குணம், ஸ்டைலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவர் பொதுவாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் விக்ரமன் தல அஜித்தை பற்றி ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதாவது ஒரு முறை படத்தின் கதையை கூறுவதற்கு தல அஜித்தை சந்திக்க சென்றுள்ளார் விக்ரமன். அப்போது அஜித் கதையை கூட கேட்காமல் உங்கள் படத்தில் வில்லனாக கூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி அதற்காக எனக்கு எதுவும் வேண்டாம் எனவும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அடுத்த முறை அவரின் துணை இயக்குனர் ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு தல அஜித்தை அனுகிறாராம்.
அப்போது அவருக்கு முதுகில் ஆபரேஷன் செய்திருந்தாராம். அப்போது கூட கதையை கேட்காமல் ஓகே நடிக்கிறேன் என கூறியதாக இயக்குனர் விக்ரமன் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இதனை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகுந்த பூரிப்பில் இருந்து வருகின்றனர்.