ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வெள்ளை சட்டையில் போனிகபூர் வீட்டிற்கு சென்ற தல அஜித்! எதற்காக தெரியுமா? தீயாய் பரவும் வீடியோ!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து அவர் கமல், ரஜினியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். மேலும் கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற ஸ்ரீதேவி அங்கு நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு பிப்ரவரி 24-ஆம் தேதி இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை சி.ஐ.டி. நகரில் நடிகை ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதில் ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் மற்றும் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். மேலும் போனிகபூரின் தயாரிப்பில் இரு படங்களில் நடித்துள்ள நடிகர் அஜித்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Today's video of Thala #Ajith sir at @BoneyKapoor residence..
— THALA FANS COMMUNITY™ (@TFC_mass) March 4, 2020
| #Valimai | Thx @ajithFC | #ValimaiDiwali | pic.twitter.com/pOuOH4qWJa