மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படத்தில் மட்டுமில்ல நிஜத்திலும் தல வேற லெவல்தான்! கொண்டாடும் ரசிகர்கள்! விஷயம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவரது தீவிர ரசிகர்கள் அஜித் படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர்.
தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ஆக்சன் போலீசாக நடித்துள்ளார். இந்நிலையில் அப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்குகிறார். அதுமட்டுமின்றி துப்பாக்கி சுடுதல் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் ரைபிள் கிளப்பில் தீவிர துப்பாக்கி பயிற்சி எடுத்து வந்த நடிகர் அஜித் மாநில அளவிலான 46 வது துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்நிலையில் தல அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெறிக்கவிட்டு அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும் தங்கப்பதக்கம் பெற்ற அவரது புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.