மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மீண்டும் தல, தளபதி மோதல்... லியோ படத்திற்கு போட்டியாக ஏகே 62 களமிறங்குகிறதா!?
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிரெய்லர் கடந்த மாதம் வெளியானது. சில தினங்களுக்கு முன் தளபதி 67 படத்தினுடைய டைட்டில்பிரமோ மற்றும் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பார்க்கப்பட்டு வருகிறது. விஜயின் லியோ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
விஜய், அஜித் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களின் திரைப்படங்கள் திரையில் மோதிக்கொண்டு தான் இருக்கின்றன. சமீபத்தில் வாரிசு, துணிவு படம் திரைக்களத்தில் மோதியது. இதில் வாரிசு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. தற்போது விஜய் நடிக்கும் லியோ மற்றும் ஏகே 62 திரைப்படம் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட் சில தினங்களுக்கு முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஆகியுள்ளது. லியோ படத்தின் டீசர் மற்றும் டைட்டில் ஒரே நேரத்தில் வெளியானது போலவே ஏகே 62 படத்திற்கும் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டிலை ஒரே நேரத்தில் வெளியிடயுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வந்துள்ளது.
லியோவை மிஞ்சும் அளவிற்கு கேங்ஸ்டர் படமாக வெளிவரவிருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஏகே 62 படத்தின் டைட்டில்லிற்காவாகவும் படத்தின் அடுத்த அப்டேட்காகவும் ரசிகர்கள் பரபரப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜின், விக்ரம் படத்திற்கு பிறகு லியோ படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.