#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அந்தரங்க புகைப்படம் எடுப்பேன்! கமல் மகள் அதிரடி!
தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்குபவர் உலகநாயகன் கமலஹாசன். இவருக்கு ஸ்ருதிகாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்ருதிஹாசன் முதலில் பாடகராக இருந்து பின்னர் முழுநேர நடிகையாக சினிமாவில் நடித்துவருகிறார். விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிக்கற்கள் அனைவருடனும் நடித்துவிட்டார் ஸ்ருதிஹாசன்.
இதுவரை சினிமாவில் நடிக்காமல் இருந்த இளையமகள் அக்ஷராஹாசன் ஹிந்தியில் ஒருபடம் நடித்திருந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அக்ஷராஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. புகைப்படத்தை பார்த்த அனைவரும் அவரா இவர் என்பதுபோல் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் வெளியாக புகைப்படங்கள் பற்றி வாய் திறக்காமலிருந்த அக்ஷரா முதன்முதலாக அந்த புகைப்படங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இந்த புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷடவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.