மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிந்தியில் ரீமேக்காகும் சூரரை போற்று! ஹீரோவாக நடிக்கப்போவது அந்த நடிகரா?? வெளிவந்த அசத்தல் தகவல்!!
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்து ஹிட்டான திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தியே இந்த படம் உருவானது. ஓடிடியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியைத் தொடர்ந்து சூரரைப் போற்று திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
சுதா கொங்கராவே அப்படத்தை இயக்க உள்ளார். மேலும் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த நிலையில் சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக்கில் ஹீரோவாக பிரபல முன்னணி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.