மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அழகிய தீயே" நாயகி ஆஸ்பத்திரியில் அனுமதி... ரசிகர்கள் அதிர்ச்சி !
2001 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நவ்யா நாயர். இவர் பெரும்பான்மையாக மலையாள படங்களில் நடித்து வந்தாலும் தமிழிலும் குறிப்பிடும்படியான நல்ல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 2004 ஆம் ஆண்டு பிரசன்னாவிற்கு ஜோடியாக அழகிய தீயே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ராமன் தேடிய சீதை, சில நேரங்களில் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இவரது எதார்த்தமான நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டி வந்தனர்.
இவருக்கு சந்தோஷ் மேனன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்காக ஜானகி ஜானே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் திடீரென உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நவ்யா நாயர். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். படத்தின் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்ததால் னஉணவு அலர்ஜி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் நலமுடன் இருப்பதாகவும் ஜானகி ஜானே படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.