திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதைதான் கொடுக்கணும்.! நிர்வாண போட்டோஷூட்டால் சர்ச்சையில் ரன்வீர் சிங்! பிரபல பாலிவுட் நடிகை கூறியதை பார்த்தீங்களா!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். விதவிதமான கலர்களில், மிகவும் வித்தியாசமான டிசைன்களில் இவர் அணிந்து வரும் உடைக்கெனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ரன்வீர் சிங் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் சில காலங்களுக்கு முன் ரன்வீர் சிங் பேப்பர் என்ற இதழுக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ ஹூட் நடத்தியுள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. மேலும் பெண்களின் மனம் புண்படும் விதமாக ரன்வீர் சிங் நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டதாக அவர் மீது மும்பை போலீசிலில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவாக நடிகை ஆலியா பட் கருத்து தெரிவித்துள்ளார். டார்லிங்ஸ் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் ரன்வீர் சிங்குக்கு எதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுகளையும் என்னால் கேட்க முடியாது. அவர் எனக்கு பிடித்தமான சக நடிகர். அவர் திரைப்படங்கள் மூலம் நமக்கு நிறைய செய்துள்ளார். மக்களுக்கு விருப்பமான நடிகராகவும் உள்ளார். இந்த நிலையில் ரன்வீர் சிங்குக்கு நாம் அன்பை மட்டுமே கொடுக்க வேண்டும், எதிர்ப்பை இல்லை என கூறியுள்ளார்.