ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மீண்டு வரவே முடியலை! அடக்கடவுளே.. கர்ப்பமாக இருக்கும் நடிகை ஆலியா பட்டிற்கு இப்படியொரு பிரச்சினையா.! ஷாக்கான ரசிகர்கள்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் பாலிவுட் சினிமாவில் டாப் ஸ்டாராக வலம்வரும் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படம் அண்மையில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆலியா பட் தற்போது கர்ப்பமாக உள்ளார்.
சமீபத்தில்தான் அவருக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஆலியா பட் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, எனக்கு சின்ன வயதிலிருந்தே இருட்டு என்றால் ரொம்ப பயம். மருத்துவர்கள் இதனை நிக்டோபோபியா என கூறினர். சிறு வயதில் ஒருமுறை என் அக்கா என்னை இருட்டான அறையில் வைத்து அடைத்து விட்டு அதனை மறந்துவிட்டார். நான் இருட்டு அறையில் தனியாக இருந்தேன்.
அதனால் மிகுந்த பயத்தில் பயங்கரமாக அழுது புலம்பி விரைத்து போய்விட்டேன். பின் நீண்ட நேரத்திற்கு பிறகு ஞாபகம் வந்து அக்கா கதவை திறந்தார். அன்றிலிருந்து இருட்டு என்றாலே எனக்கு மிகவும் பயம். இரவு லைட்டை ஆப் செய்தால் கூட வெளிச்சத்திற்காக ஜன்னலை திறந்து வைத்துக் கொள்வேன்.
என்னால் அந்த பயத்தில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. அதுபோல தோல்வி என்றாலும் எனக்கு ரொம்ப பயம் அதனாலே மிகவும் கடினமாக உழைப்பேன். எது செய்தாலும் பலமுறை யோசிப்பேன் என்று கூறியுள்ளார்.