மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் அல்லு அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!
நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் முக்கிய நடிகராக உருவெடுத்துள்ளார்.
தற்போது இவர் புஷ்பா 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே தமிழ் இயக்குனர் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக லிங்குசாமி, அட்லி ஆகியோரிடம் கதையும் கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் கதை ஒன்றை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த கதை அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.