மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. ராஜா ராணி 2 தொடரில் இவர்தான் சந்தியாவா?? ஆலியா மானசாவே கூறிய பதிலை பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரசிகர்களை கவர்ந்த தொடர்கள் ஏராளம். அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி 2. இந்த தொடரில் ஹீரோவாக திருமணம் சீரியலில் நடித்து பெருமளவில் பிரபலமான சித்து நடித்து வருகிறார். மேலும் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வருகிறார்.
ஆலியா மானசா ராஜாராணி முதல் பாகத்திலும் ஹீரோயினாக நடித்தார். மேலும் அதில் ஹீரோவாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்தார். சீரியலில் கணவன்,மனைவியாக நடித்த இருவரும் நிஜத்திலும் காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.
இந்த நிலையில் ஆலியா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அண்மையில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் சீரியலில் இருந்து விலக போகிறீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு ஆல்யா, ராஜா ராணி 2 சீரியலிலிருந்து விலகுவது குறித்து யோசிக்கவில்லை, ஒரே ஒரு சந்தியா தான், அது இந்த ஆல்யா மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.