மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. பார்த்துகிட்டே இருக்கலாம் போல.! மணக்கோலத்தில் கொள்ளை அழகில் ஆலியா மானஸா.! சொக்கி கிடக்கும் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பிரபலமடைந்த நெடுந்தொடர் ராஜாராணியில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டவர் ஆலியா மானசா. இவர் அதே தொடரில் ஹீரோவாக கார்த்திக் என்ற ரோலில் நடித்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மேலும் இருவரும் கியூட் ஜோடியாக வலம்வந்தனர்.
பின் ஆலியாவிற்கு முதல் குழந்தை பிறந்த பிறகு அவர் விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் மீண்டும் அவர் இரண்டாவது முறை கர்ப்பமானதால் அவர் அந்த தொடரிலிருந்து பாதியிலிருந்தே விலகினார். மேலும் அவருக்கு இரண்டாவது அழகிய ஆண்குழந்தை பிறந்தது. பின் சில மாதங்களுக்கு பிறகு தனது உடல் எடையை குறைத்து அவர் சன் டிவியில் இனியா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் டான்ஸரான ஆலியா நடன நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் எப்பொழுது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது குழந்தைகளின் வீடியோ, ரீல்ஸ் வீடியோ ஆகியவற்றை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது இனியா தொடரில் வரவிருக்கும் திருமண காட்சிக்காக மணப்பெண் போல் அலங்காரம் செய்து கொள்ளை அழகில் உள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் பகிர்ந்த நிலையில் அது ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.