மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படப்பிடிப்பின் போது வயிற்று வலியால் கதறி துடித்த ஆலியா மானசா.! என்ன நடந்தது தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் ஆலியா. இவர் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வருகிறார். விளம்பர படங்களிலும், சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து இருக்கிறார்.
மேலும் ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த துணை நடிகரான சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த சீரியலின் போது ஆலியா கர்ப்பமாகி விட்டார். இதனாலேயே ராஜா ராணி சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 சீரியலில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போதும் மீண்டும் கர்ப்பமாகி சீரியலில் இருந்து விலகினார். தற்போது சன் தொலைக்காட்சியில் இனியா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதுபோன்ற நிலையில், இனியா சீரியல் படப்பிடிப்பின் போது ஆல்யா, வயிற்று வலியால் கதறி துடித்த வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த வீடியோவில் அன்றைய தினம் சிஎஸ்கே மேட்ச் நடக்கவிருப்பதால் இனியாவிற்கு லீவு வேண்டும் என்று சீரியல் இயக்குநரிடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டாராம். இதனால் பொய்யாக வயிற்று வலி என்று கூறி கதறி அழுததை போன்று காமெடியாக நடித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி எப்படி எல்லாம் நடிக்கிறாங்க என்று ரசிகர்கள் காமெடியாக இவரை கலாய்த்து வருகின்றனர்.