மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரைகுறை ஆடையுடன் கடற்கரையில் தவழும் அமலாபால்! வைரல் புகைப்படங்கள்
சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலாபால். பலவிதமான கருத்துக்களை பெற்றது சிந்து சமவெளி திரைப்படம். அதை தொடர்ந்து மைனா திரைப்படத்தில் நடித்தார் அமலாபால். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து வாய்ப்புகள் குவிய தொடங்கின.
நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக வேட்டை படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் அமலாபால். தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாகா நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் இயக்குனர் AL விஜயுடன் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பிறகு மீண்டும் சினிமாவில் முழுநேரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் நடிகை அமலாபால். இந்நிலையில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை அமலாபால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது கடற்கரையில் அரைகுறை ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
When you're hit with never ending problems. Ask yourself 'What would 3 year old me do?'
— Amala Paul ⭐️ (@Amala_ams) March 5, 2019
Doodle over your difficulties and move on! 🎉#goodvibesonly #mermaiddreams #beachbaby pic.twitter.com/ldKzhYy2Qj