#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அட.. மலை உச்சியில் என்னம்மா பண்றீங்க! என்ஜாய் செய்யும் அமலாபால்! வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து அவர் மைனா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அவரது திரை வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவருக்கு ஏராளமான படவாய்ப்புகளும் குவிந்தது.
அமலா பால் முன்னணி நட்சத்திரங்களான விக்ரம், விஜய், தனுஷ், ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் இயக்குனர் விஜயை காதலித்து கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் ஒத்துவராத நிலையில் இருவரும் சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். இந்நிலையில் அமலாபால் தற்போது மலை உச்சியில் நடந்து செல்லும் வீடியோவை பகிர்ந்து, தெரியாததை நோக்கி ஒரு பயணம் என பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.