திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெரும் சோகத்தில் இருந்த நடிகை அமலாபாலுக்கு அடித்த மாபெரும் அதிர்ஷ்டம்! உற்சாகத்துடன் குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக இருந்த அவர் அதனை தொடர்ந்து ஆடை திரைபடத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். அப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனாலும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் அமலாபாலின் தந்தை சமீபத்தில் உயிரிழந்தார். அதனால் அவர் பெரும் சோகத்தில் இருந்தார்.
இந்நிலையில்,தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்த நடிகை அமலாபாலுக்கு தற்போது பாலிவுட் சினிமாவில் நடிக்கும் மாபெரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது நடிகை அமலாபால் 70களில் நடக்கும் காதல் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகும் வெப் சீரியஸில் நடிகை அமலாபால் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகை அமலாபாலே தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
And we roll! Excited to be a part of this journey with the perfect recipe for a dramatic love story set during the 70s Bollywood,what more could have I asked for my Bollywood & digital debut @TahirRajBhasin @_Amrita_Puri @MaheshNBhatt @PushpdeepBhardw @jiostudios @VisheshFilms pic.twitter.com/kIEmEt68U8
— Amala Paul ⭐️ (@Amala_ams) February 4, 2020