மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா! சூர்யாவின் சூரரை போற்று படத்தை அமேசான் எவ்வளவு கொடுத்து வாங்கியுள்ளது தெரியுமா? வெளியான புதிய தகவல்!
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகிய திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் அபர்ணா, மோகன் பாபு, ஊர்வசி, கருணாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து திரைக்கு வரவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. மேலும் சூரரை போற்று படம் தியேட்டரில்தான் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக சூர்யா அறிவித்துள்ளார்.
இந்நிலையில் ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தை அதே விலைக்கு அமேசான் ப்ரைம் இணையதளத்திற்கு விற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் சாட்டிலைட் மற்றும் இந்தி டப்பிங் உரிமைக்காக ரூ.40 கோடிக்கு விலைப்போகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு வெளிவருவதற்கு முன்பே சூரரைப் போற்று படம் 100 கோடி சம்பாதித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.