மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகை மீது துப்பாக்கிசூடு நடத்திய கும்பல்.. நூலிழையில் உயிர்தப்பிய நடிகை.. பரபரப்பு சம்பவம்.!
கணவரோடு வெளியே சென்ற பிரபல நடிகையின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஹாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் டென்னிஸ் ரிச்சர்ட். இவர் நேற்று தனது கணவர் ஆரோன் பைப்பர்சுடன் வெளியே சென்றிருந்தார்.
அப்போது, தனது பிக் அப் டிரக்கை நிறுத்துவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், இவர்களது பிக்கப் டிரக் பின்னால் வந்த கும்பல், திடீரென இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் ஆத்திரமடைந்த கும்பல் காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து நடிகையை நோக்கி துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
நல்வாய்ப்பாக நடிகை துப்பாக்கி குண்டுகள் காயத்தினால் பாதிக்கப்படவில்லை, நூலிழையில் தப்பித்துக்கொண்டார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நிலையில், இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.