மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
19 வயதில் உடலில் ஒட்டுத்துணி இல்லாமல் நடித்தது ஏன்? - பிரபல நடிகை ஓபன்டாக்..! பதறிப்போன ரசிகர்கள்..!!
ஹாலிவுட்டில் "American Gun, Mean Girls, Gypsies" உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை அமண்டா செய்ஃபிரைட். தற்போது இவருக்கு 36 வயதாகும் நிலையில், சிறுவயதிலிருந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 19 வயதில் Mean Girls எனும் படத்தில் ஆபாசக்காட்சி ஒன்றில் நடத்திருந்தார். இதனால் இப்படம் வெளியான சமயங்களில் சர்ச்சையை உண்டாக்கியிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அமண்டா, தனது வாழ்க்கை குறித்தும், திரைத்துறையில் தான் சந்தித்த பல சவால்களை குறித்தும் ஓபனாக பேசினார்.
அப்போது அவர், "நான் 19 வயதாக இருக்கும்போதே ஆடையின்றி நடித்ததை அனைவரும் கேலி செய்தீர்கள். ஆனால் நான் எதற்காக அதை செய்தேன் என்று எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அந்த வயதில் வேலையில் தொடர வேண்டும் என்று எண்ணம் மட்டும்தான் என்னிடம் இருந்ததே தவிர, வேறு ஏதும் தோணவில்லை.
சொல்லப்போனால் அப்படி நடிக்கவேண்டும் என நான் மறைமுகமாக வருத்தப்பட்டேன். நிறைய ஆண்கள் அப்டத்தின் காட்சியை நினைவுகூர்ந்து என்னை கிண்டல் செய்தனர். அந்த சமயங்களில் மிகவும் நான் உடைந்து போனேன்" என்று கூறினார்.
மேலும் "Wicked" எனும் படத்தில் தன்னை நடிக்க விடாமல் நிராகரித்தது குறித்தும், "நமது தொழிலில் முன்னேறி விடாமல் செய்வதற்கு நிறைய பேர் இருப்பார்கள். ஆனால் எனது வேலையில் யாரும் என்னை ஒன்றும் செய்து விட முடியாது. என் தனிப்பட்ட வாழ்க்கை என்னுடையது" என்று கூறினார்.