லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சனை சர்ச்சையாக விமர்சித்த அமீர்கான்.. என்ன காரணம்.?



Amir khan controversy talk about nelson and lokesh

1973ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர் அமீர்கான். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உள்ள இவர், "அமீர் கான் ப்ராடக்ஷன்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Lokesh

தேசியத் திரைப்பட விருது, பிலிம்பேர் விருது, ஸ்டார் ஸ்க்ரீன் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள அமீர் கான், இவரது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த முதல் திரைப்படமான "லகான்" ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகியிருக்கும் அமீர் கான், தற்போது தனது தாயின் சிகிச்சைக்காக சென்னையில் தங்கியுள்ளார். சமீபத்தில் மிக்ஜாம் புயலில் மாட்டிய அவர் மீட்கப்பட்டார். இந்நிலையில் பேட்டியளித்த அவர், "சமீப காலமாக வெளியாகும் படங்களில் வன்முறை அதிகமுள்ளது.

Lokesh

நெல்சன், லோகேஷ் கனகராஜ், சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோருக்கு மேக்கிங் தெரியவில்லை. வன்முறை மட்டும் தான் படமா? கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள். குழந்தைகளுடன் எப்படி படம் பார்ப்பது?" என்று காட்டமாக பேசியுள்ளார்.