ஒவ்வொரு கோதுமை மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15,000 ரூபாய்..! ஏழைகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி..! மறைமுகமாக உதவி செய்த பிரபல நடிகர்.!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமீர் கான் கொரோனா ஊரடங்கால் அவதிப்படும் ஏழை மக்களுக்கு மாவு பாக்கெட்டுக்குள் ரூபாய் 15,000 வைத்து கொடுத்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பகிரப்பட்டுவருகிறது.
டெல்லியில் குறிப்பாக ஏழை மக்கள் வசிக்கின்ற ஒரு பகுதிக்கு கடந்தஹ் 23.4.2020 அன்று இரவில் ஒரு லாரி வந்ததாகவும், அந்த லாரியில் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுகள் மட்டும் நிறைய இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அந்த லாரியில் இருந்த சில இளைஞர்கள் எல்லோரும் வாங்க ஒரு கிலோ பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என கூறியுள்ளனர். ஒரு கிலோ மட்டும் தானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் யாரும் வந்து அந்த வரிசையில் நின்று மாவை வாங்கவில்லை.
ஆனால், அந்த ஒருகிலோ மாவு தங்கள் பசியை போக்கும் என வரையில் நின்ற சிலர் அந்த மாவை வாங்கி சென்றுள்ளன்னர். பின்னர் மறுநாள் காலையில் அனைவருக்கும் அந்த மாவு பாக்கெட்டை பிரித்த போது, அந்த பாக்கெட்டுக்குள் ரூபாய் 15000 பணம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தை மறைமுகமாக செயல்படுத்தியது நடிகர் அமீர்கான்தான் என அந்தத் பதிவில் கூறப்பட்டுள்ளது.