சுகர் பேசண்ட்ஸ் பனங்கிழங்கை சாப்பிடலாமா? உங்களுக்கான சந்தேகமும், பதிலும்.!



Sugar Patients Eat panangilangu

 

பொங்கல் பண்டிகையையொட்டி சீசன் காலங்களில் மட்டும் கிடைக்கும் பனங்கிழங்கு, உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். பருவ காலத்தில் மட்டும் கிடைக்கும் பனங்கிழங்கை நாம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது, இன்று சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கை சாப்பிடலாமா? என தெரிந்து கொள்ளலாம்.

நரம்பு பாதிப்பு சரியாகும்

பனங்கிழங்கில் இருக்கும் நார்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டதும் குளுக்கோஸ் வெளியேறாமல் தடுக்கிறது. இதில் இருக்கும் மெக்னீசியம், நுன்னூட்ட சத்து கணையத்தில் இன்சுலின் சுரக்கும் நிகழ்வை அதிகப்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தும். இதனால் சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கை கட்டாயம் சாப்பிடலாம். நரம்பு பாதிப்புகளையும் பனங்கிழங்கு சரி செய்யும்.

இதையும் படிங்க: காபி, டீக்கு பதிலாக தினமும் இந்த ஒரு பானம் டிரை பண்ணுங்க.! அழகுடன், ஆரோக்கியமும் கிடைக்கும்.!

இரத்த நாள அடைப்பு தவிர்க்கப்படும்

இதில் இருக்கும் வைட்டமின் சி, இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் சர்க்கரையின் அளவு குறைக்கப்படும். பனைக்கிழங்கில் அதிகம் இருக்கும் இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீர்படுத்த உதவி செய்யும், இதய ஆரோக்கியமும் மேம்படும். கால்சியம் எலும்புகள், தசைகள் வலுப்பெற உதவும். ஒமேகா 3 கொழுப்பு, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கப்படும். 

மலச்சிக்கல் சரியாகும்

தொற்று நோய் ஏற்படாமல் பாதுகாத்து, உடலில் நோயெதிர்ப்பு திறனை பனைக்கிழங்கு அதிகப்படுத்தும். அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உண்டு. நார்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும். வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தி பனை கிழங்கு உடலுக்கு நன்மை செய்கிறது. உடலை எடையை கட்டுப்படுத்த நினைப்போர், பனங்கிழங்கை சாப்பிடலாம். 

பிற சந்தேகங்கள் இருப்பின் அரசு மருத்துவரை அணுகலாம். மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.