பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
விவாகரத்திற்கு பின்பும் ஓயாத உறவு.. வாரம் தவறாமல் ஆரவாரம் செய்யும் அமீர்கான்..!
இந்தி திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். 1986 ஆம் ஆண்டு ரேனா தத்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பின்னர் அவருடன் விவாகரத்து ஆன பிறகு 2005ஆம் ஆண்டு கிரண் ராவோ என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
ஒரு வருடத்திற்கு முன்பு தனது இரண்டாவது மனைவியுடனும் விவாகரத்து செய்துவிட்டார் அமீர்கான். தற்போது லால் சிங் சந்தா திரைப்படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் அமீர்.
கரீனா கபூர் மற்றும் அமீர்கான் சமீபத்தில் காபி வித் கிரண் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அப்போது தனது முன்னாள் மனைவிகள் குறித்து பேசியுள்ள அமீர்கான், 'நாங்கள் எவ்வளவு பிசியாக இருந்தாலும் வாரம் ஒரு முறை கட்டாயம் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். எங்களுக்குள் அளவுகடந்த அக்கறை, அன்பு மற்றும் மரியாதை எந்நேரமும் இருந்து வருகிறது' என கூறியுள்ளார்.