மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் சர்ச்சையில் சிக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான்.! மனம் திறந்து பேட்டி அளித்த அம்மு அபிராமி..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் அம்மு அபிராமி. இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதன் முதலில் 'பைரவா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' என்ற வெற்றித் திரைப்படத்தில் ஸ்கூல் பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும் தென்னிந்திய அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் அம்மு அபிராமி.
இதன்பின் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அம்மு அபிராமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றிருந்தார். திரைத்துறையில் பிசியான நடிகையாக இருந்து வரும் அபிராமி சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாகவே இருந்து வருகிறார்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் அம்மு அபிராமி கலந்துகொண்ட பேட்டியில் தொகுப்பாளர், இவர்களிடம் சர்ச்சைகள் சிக்காததற்கு என்ன காரணம் என்று கேட்டிருந்தார். அதற்கு "தனிப்பட்ட வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கிறேன். சினிமா வாழ்க்கை குறித்து யார் விமர்சித்தாலும், என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளேன். இதனால்தான் பேட்டியில் கூட என் வாழ்க்கை குறித்து பேச மாட்டேன்" என்று பதில் அளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அம்மு அபிராமிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.