திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மலையாள சினிமாவில் ஒரே படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இளம் நடிகை தற்போது தமிழ் சினிமாவில்! அதுவும் இந்த பிரபலத்துடனா-எதிர்பார்பில் ரசிகர்கள்.
மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வினித் சீனிவாசன் கதாநாயகனாக நடித்த 'தண்ணீர் மாத்தன் தினங்கள்' என்கிற படம் வெளியானது. குறைந்த பட்ஜெட்டில் அதாவது 2 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 45 கோடி வசூலை ஈட்டியது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக அனஸ்வரா ராஜன் என்கிற இளம்பெண் அறிமுகமாகியுள்ளார்.
நடிகை அனஸ்வரா நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டாக அமைந்ததால் உடனே இவரைப்பற்றி கேள்விப்பட்ட எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் த்ரிஷாவை வைத்து தான் இயக்கிவரும் ராங்கி படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் இவரை ஒப்பந்தம் செய்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை சரவணனின் குருநாதரான ஏ.ஆர்.முருகதாஸ் எழுதியுள்ளார்.. கிரைம் த்ரில்லராக உருவாக இருக்கும் இந்த படத்தில் அனஸ்வரா ராஜன் நடிப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறார்.
மேலும் அந்த இளம் நடிகை நடிக்கும் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.