திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. பளிங்கு சிலைப் போல பளபளக்குறியேமா! ஹாயாக காத்து வாங்கும் தொகுப்பாளினி ரம்யா!! வைரலாகும் புகைப்படங்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு ரீச்சாகி பிரபலமானவர் விஜே ரம்யா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஏராளமான கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள் போன்றவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
மேலும் வெள்ளித்திரையிலும் தலைக்காட்டிய அவர் சினிமாவில் ஏராளமான படங்களிலும் முக்கிய துணைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் கூட சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொகுப்பாளினி ரம்யா யோகா ஆசிரியையும் கூட.
சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ சூட் புகைப்படங்கள், யோகா, உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள அவர் தற்போது தனது பளபளக்கும் பளிங்கு மேனியை காட்டி கப்பலில் இருந்தவாறு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.