மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"புயல் மழையில் நடனமாடிய ரோஜா! வைரல் வீடியோவால் ஆந்திர அரசியலிலும் புயல்!
1991ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஆர். கே. செல்வமணி இயக்கிய "செம்பருத்தி" திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள ரோஜா, குச்சிப்புடி நடனத்தில் தேர்ந்தவர்.
தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர். கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரோஜா தற்போது ஆந்திராவின் சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். இந்நிலையில் சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல், 110கிமீ . வேகத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது.
10 மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர், 40லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடுக்கிவிட்டுள்ளார்.
இந்நிலையில் புத்தூர் பிள்ளாரிப்பட்டு அலுவலகம், தர்மாம்பா புரத்தில் ரோஜா களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது கனமழை பெய்தது. அப்போது ரோஜா குடையை வைத்தபடி மழையில் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.