மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. ஆண்ட்ரியா தங்கைக்கு திருமணம்! மாப்பிள்ளை யாருனு பார்த்தீங்களா!! வைரலாகும் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்பரூபம், தரமணி, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவருக்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
மேலும் ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் கா மற்றும் பிசாசு 2 என்ற படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆண்ட்ரியா பாடகியாகவும் பல ஹிட் பாடல்களையும் பாடி வருகிறார்.
ஆண்ட்ரியாவின் சகோதரி நாடியா. அவர் பெல்ஜியத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது செட்ரிக் என்பவருடன் காதலில் விழுந்து தற்போது அவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது தங்கையின் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.