மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முடியாதுனு சொல்லியும் அவர் கட்டாயப்படுத்தினார்! சீக்ரெட்டை போட்டுடைத்த ஆண்ட்ரியா! என்னனு தெரியுமா??
தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக தனது பயணத்தை தொடங்கி சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனை தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் நடிப்பது மட்டுமின்றி முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் ஏராளமான பாடல்களை பாடி வருகிறார். மேலும் வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். ஆண்ட்ரியா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான புஷ்பா படத்தில் இடம் பெற்று பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிய 'ஊ சொல்றியா மாமா' பாடலை பாடியிருந்தார்.
இந்நிலையில் ஊ சொல்றியா மாமா பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா கூறுகையில், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் எனது நீண்ட கால நண்பர். அவர் இந்த பாடலை பாடச்சொல்லியதால் சில வரிகளை பாடினேன். ஆனா எனக்கு திருப்தியாக இல்லை. அதனால் என்னால் பாட முடியாது என மறுத்துவிட்டேன்.
ஆனால் டிஎஸ்பி என்னை கட்டாயப்படுத்தினார். உன்னால் பாட முடியும் என என்னை ஊக்கப்படுத்தினார். அதன் பிறகுதான் நான் அந்த பாடலை பாடினேன். ஊ சொல்றியா பாடல் ஹிட்டாக டிஎஸ்பிதான் காரணம் என கூறியுள்ளார்.