திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அங்காடித்தெரு பட நடிகையின் இன்றைய பரிதாப நிலை.. ஓடோடிச்சென்று உதவிய பிக்பாஸ் பிரபலம்.. குவியும் பாராட்டுக்கள்..!
கடந்த 2010-ல் வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் அங்காடித்தெரு. இந்த படம் பல்வேறு விருதுகளை குவித்து இருந்தது. இப்படத்திற்கு பின்னர் நடிகை சிந்து நாடோடிகள், தெனாவெட்டு, நான் மகான் அல்ல, போக்கிரி உட்பட பல்வேறு படங்களில் நடித்திருந்தார்.
இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை அங்காடித்தெரு படம்பெற்றுக் கொடுத்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகதான் படுத்த படுக்கையாகி சிகிச்சை பெற்று வருவதாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இது குறித்த வீடியோவில், மார்பக புற்றுநோய் இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
மேலும் பணம் இல்லாததால் தனக்கு யாரேனும் உதவி செய்யவேண்டும் என்றும் கூறியிருந்தார். அவருக்கு டிக்டாக் மூலமாக ஷார்ட் பிலிம் உட்பட பல்வேறு படங்களில் நடித்த தனலட்சுமி என்பவர் ரூ.1 லட்சம் கொடுத்து பண உதவி செய்துள்ளார். இவர் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி பாராட்டை பெற்றுள்ளது.